ஸ்கொட்லாந்தில் புகைப்படம் எடுக்க முற்பட்டமாணவர்கள் உயிரிழப்பு

ஸ்கொட்லாந்தின் – டன்டீ பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் இரு இந்திய மாணவர்கள் லின் ஆஃப் தும்மெல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

22 மற்றும் 26 வயதான இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் இருவரும் தமது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது புகைப்படம் எடுக்க முற்பட்ட போது நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரு மாணவர்களும் டன்டீ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் மற்றும் பொறியியலில் முதுகலைக் கல்வியை பயின்று வந்துள்ளனர்.

இது குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

“புதன்கிழமை இரவு 7 மணியளவில் மாணவர்கள் நீரில் மூழ்கியமை குறித்த தகவல் கிடைத்திருந்தது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மாணவர்களின் உடல் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, “இது ஒரு சோகமான விபத்து, எம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என டன்டீ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளர்.

Recommended For You

About the Author: admin