உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு தாம் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்துடன் இலங்கை தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
தபால் திணைக்களம் ஒருபோதும் குறுஞ்செய்திகள் மூலம் வங்கி அட்டை மற்றும் கடன் அட்டைத் தகவல்களை கேட்பதில்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.