மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை கட்டாயம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. மேலதிகாரிகள் ஏதாவது ஒரு வேலை சொன்னால் கூட அதை பொறுமையாக செய்து முடியுங்கள். எதிர்த்து பேசாதீர்கள். உங்களால் செய்யவே முடியாத வேலையாக இருந்தாலும், முடியாது என்பதை சுமுகமாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. இன்று முன்கோபப்பட்டால் இழப்புகள் உங்களுக்குத் தான் நேரிடும் பார்த்துக்கோங்க.
ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய போட்டிகள் இருக்கும். உங்களுடைய வேலையை பிடிப்பதற்கே நாலு பேர் வரிசை கட்டி நிற்பார்கள். உஷாரா இருந்துக்கோங்க. நீங்க சின்ன தவறு செய்தாலும் அதை பெருசாக மாற்றி, உங்களை காலி செய்ய ஒரு கூட்டமே உங்களை நோக்கி படை எடுக்க வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளிடம் உஷாராக இருக்க வேண்டிய நாள் இது.
மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்காது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யாதீர்கள். அத்தியாவசியமான செலவுக்கு மட்டும் பணத்தை வெளியில் எடுங்கள். இல்லை என்றால் பணம் போன இடம் தெரியாது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலின் மீது இருக்கக்கூடிய அக்கறையும் ஆர்வமும் அதிகரிக்கும். தொழிலை விரிவு படுத்த உங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாமியார் மருமகள் உறவு பலப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சில பேருக்கு சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்.
சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். உங்க மனதுக்குப் பிடித்தபடி ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லை விலகும். உற்சாகம் பிறக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். உங்களுக்கு எதிரியாக இருந்த நண்பர்கள் கூட இப்போது நட்புறவு பழகுவார்கள்.
கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு சூடு தரக்கூடிய பொருட்களை சாப்பிட வேண்டாம். ஜீரணக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது பார்த்துக்கோங்க. –
துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன தடைகளும் சரியாகிவிடும். தொழிலில் மேன்மை அடைய பல பேரின் ஐடியா உங்களுக்கு உதவி செய்யும். நண்பர்களும் உதவி செய்வார்கள். புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாகும் நல்லது நடக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பேறித்தனத்தோடு தொடங்கும். எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். எரிச்சல் அடையும்படி நண்பர்கள் நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாளை கடந்து செல்வதில் உங்களுக்கு நிறைய சிரமங்கள் வரலாம். ஆனால் எதைக் கண்டும் பயந்து துவண்டு போகாமல் இஷ்ட தெய்வத்தை நினைத்து மனதிற்கு பட்ட நல்லதை செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் முதல் மரியாதை உங்களுக்கு தான் கிடைக்கும். எதிரிகள் முன்னால் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களை தவறாக புரிந்து கொண்ட கணவர் கூட இன்று பாசமாக பேசுவார்.
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமாக அமைதியாக செல்லும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வருமானம் சீராக இருக்கும். எதிர்பாராத நல்ல செய்தி தொலைபேசியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு பெரிய சந்தோஷமாக இருந்தாலும் சரி அதை அளவோடு வெளி காட்டுவீர்கள்.
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் ஏற்றம் இரக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாமல் சில பேருக்கு தலைவலி வரும். உங்கள் வேலையை அடுத்தவர்கள் தலையில் கட்ட பார்ப்பீர்கள். ஆனால் எதிராளியும் உஷாராக இருப்பான். யாரையும் உங்களால் இன்று ஏமாற்ற முடியாது. உங்கள் வேலையை நீங்கள் தான் பார்த்தாக வேண்டும்.
மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. பணவரவில் சிக்கல்கள் இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது நடக்காமல் போனதால் கொஞ்சம் ஏமாற்றத்தில் உங்களுடைய டென்ஷனை குடும்பத்தின் மீது திருப்புவீர்கள். கொஞ்சம் பொறுமையோடு இருங்கள். அடுத்தவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நிதானம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும்.