75 ஆண்டுகளுக்குப் பின் கனமழையால் பாதிக்கப்பட்ட துபாய்

75 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

gd

Flood in Dubai

சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையினால், துபாய் உட்பட அமீரகத்தின் ஏழு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், உலகப் புகழ்பெற்ற துபாய் ஷாப்பிங் மால், எமிரேட்ஸ் ஷாப்பிங் மால் ஆகியவையும் சில அடிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jtur

Flood in Dubai

jgf

Flood in Dubai

இதற்கிடையில், எமிரேட்ஸ் (emirates) மற்றும் ஃப்ளை துபாய் (fly dubai) உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் துபாய்க்கான தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

மேலும், அதிகாரிகள் பல விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.

kgfk

Flood in Dubai

Recommended For You

About the Author: admin