பிரபல சமூக ஊடகமாக X ஐ (முன்னர் டுவிட்டர்) பாகிஸ்தான் தடைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான X ஐ தற்காலிகமாக முடக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.
பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து பாக்கிஸ்தானில் X தளத்தைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தனர்.
எனினும், அரசாங்கம் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையில், இன்றைய தினம் எழுத்துப்பூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்த அமைச்சகம் தடையை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சட்டதிட்டங்களை கடைபிடிக்க தவறியமையால் X தளத்தை தடை விதிக்க வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் X தளம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.