கச்சத்தீவு விவகாரம் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலால் இலங்கையில் வாழும் மில்லியன் கணக்கான தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படும் என்பது மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக முடிந்துப் போன ஒரு பிரச்சினையை பேசக்கூடாது எனிவும், இது கண்டனத்திற்குரியது” என்றும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாகவும், இது குறித்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே மோடி அரசு கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கச்சத்தீவு முடிந்துப் போன பிரச்சினை. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டது. மோடி 2014 முதல் பதவியில் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஏன் இந்தப் பிரச்னை பற்றி பேசவில்லை? என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.