Google Map பயன்படுத்துறீங்களா?: பாதுகாப்பு முக்கியம்

நாம் எங்கேனும் தெரியாத வெளியிடங்களுக்குச் செல்லும்போது சரியான பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பின் உதவியை நாடுவோம்.

என்னதான் இந்த கூகுள் மேப் நமக்கு உதவினாலும் குறிப்பிட்ட அம்சங்கள் தனியுரிமை மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுகின்றன.

எனவே, இந்த கவலையைப் போக்குவதற்காக கூகுள் பிரைவட் அணுகளை கூகுள் மேப்ஸ் செயலி பயனர்களுக்கு வழங்குகிறது.

இந்த செயலியின் மூலம் கூகுள் மேப்களில் தரவுகளை சேமிக்காமல் மேப்ஸ் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்ட் போனில் இதை எப்படி பயன்படுத்தலாம்?

முதலில் மொபைல் அல்லது டேப்பில் கூகுள் மேப்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின் திரையின் மேல் வலது மூலையில் உள்ள சுய விபர ஐகோனை க்ளிக் செய்யவும்.

அதில் ப்ரைவட் மோட் ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.

ஆப்பிள் ios ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகளில் இதை எப்படி பயன்படுத்தலாம்?

கூகுள் மேப்பை பதிவிறக்கம் செய்யுங்கள்.

வலத மூலையிலுள்ள சுயவிபரப் படத்தை தட்டுங்கள்.

பிரைவட் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

இந்த வசதியில் பயணம், பின் தொடர்தல், இருப்பிடப் பகிர்வு, தேடல் வரலாறு உள்ளிட்டவை தடுக்கப்படும்.

Recommended For You

About the Author: admin