கொரோனாவை விட கொடிய தொற்றாக மாறும் வைரஸ்

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தான வைரஸ் தொற்று ஒன்று பரவுவதாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

H5N1 என்ற பறவைக் காய்ச்சல் தொற்றே பரவுவதாகவும், அது அபாயகரமாக இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பறவை காய்ச்சல் கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவித்தார்.

இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin