நிர்மலா சீதாராமனின் கையில் பணமில்லை – அவர் பையில் உள்ளது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை” என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வேண்டுகோள் விடுத்ததை நிர்மலா சீதாராமன் மறுத்திருந்தார்.

தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சினை உள்ளது என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய நிதியமைச்சரிடமே பணம் இல்லையா என கேள்விகள் எழுந்தன.

அதற்கு இந்திய நிதியமமைச்சர் சீதாராமன் “”என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு.

இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் இல்லை” என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் பணமில்லை ஆனால் அவர் பையில் , படுக்கை அறையில் பணம் உள்ளதென காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin