இன்றைய ராசிபலன்கள் 21.03.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று துடிப்போடு செயல்படுவீர்கள். வேலையில் எவ்வளவு சுமையை உங்கள் தலையில் இறக்கி வைத்தாலும், அதை முடித்தே ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டுவீர்கள். இதனால் உங்களுடைய ஆர்வமும் அதிகரிக்கும். அறிவு திறனும் அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். தொழில் சிறப்பாக நடக்கும். வாழ்க்கைத் துணையிடம் கொஞ்சம் பணிவாக பேசவும். அதிகாரத்தை வீட்டில் காட்டாதீங்க. பாசத்தை காட்டினால் நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை என்றால் இதுதான் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிறைவோடு உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலும் பலம் பெறும். வருமானம் சீராக இருக்கும். தொழிலில் எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிம்மதியாக இருக்கப் போகின்றது. காலையில் எழுந்த உடனே கோவிலுக்கு போகக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று முழுவதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செய்திகள் செவிகளில் விழும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். கூடுதல் பொறுப்புகள் அதிகமாக தலைமேல் பாரமாக இறங்கும். இதனால் சின்ன சின்ன இடையூறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை என்றால் அப்படித்தான் இருக்கும். அதை நீங்கள் இன்று அனுசரித்து செல்லவும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. வெளியிடங்களுக்கு சென்றால் அந்த இடத்தில் எப்படி நடந்துக்க வேண்டும் என்று யோசித்து செயல்படனும். முன்கோபடக்கூடாது. குறைவாக பேசுங்கள். இன்று அதிகமா பேசாதீங்க. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்றாட வேலையை அன்றே முடிக்க பாருங்கள். சோம்பேறித்தன படாதீங்க. தொழிலில் வருமானத்தை பார்ப்பதில் சில பிரச்சனைகள் இருக்கும். சங்கடங்கள் நிறைந்த இந்த நாளை சரியாக கடந்து செல்ல பொறுமையை கடைப்பிடிக்க போதும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொழுது போக்கு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. செய்யக்கூடிய வேலை ஒரு பக்கம் இருந்தாலும் உங்களை நீங்க ஜாலியா வச்சுப்பீங்க. பத்து வயது குறைந்தது போல ஒரு உற்சாகத்தோடு இருப்பீங்க. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கை துணை உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருந்த வாழ்க்கை துணை இன்று உங்களோடு நல்லுறவு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நிதி நிலைமை சீராக இருக்கும். –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். மூச்சு விடுவதற்கு கூட நேரம் இருக்காது. ரொம்பவும் மன அழுத்தத்திற்கு சில பேர் ஆளாகுவீர்கள். அந்த சமயம் வேலை செய்வதை நிறுத்திவிட்டு ஒரு ஐந்து நிமிடம் பிடித்த பாடலைக் கேளுங்க. நிச்சயம் ரிலாக்ஸா மாறிடுவீங்க. புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கையான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையையும் தொலைநோக்கு பார்வையோடு பார்ப்பீர்கள். ஒரு பெரிய அனுபவசாலி போல உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கப் போகின்றது. எடுத்தேன் கவுத்தேன் என்று எந்த வார்த்தையையும் பேச மாட்டீங்க. அடுத்தவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழும் அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை இன்று இருக்கும். மனது சந்தோஷம் அடையும். உங்களை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சங்கடங்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் வேலைகள் சரியாக நடக்காது. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் நீங்கள் சொல்லும் பேச்சைக் கேட்க மாட்டாங்க. கொஞ்சம் டென்ஷன் படுத்துவாங்க. எல்லா விஷயத்தையும் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலையை திருப்தியாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனை தீரும். வருமானம் சீராகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். போட்டி போட்டு வேலை செய்தவர்கள் பொறாமையோடு வேலை செய்பவர்கள், இனி நட்புறவோடு வேலை செய்வார்கள். வேலை விஷயத்தில் பிரச்சனை என்றால் அதைக் கொண்டு போய் இன்று குடும்பத்தில் காட்டக் கூடாது. மனைவியிடம் பொறுமையாக பேசுங்கள் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய கடமைகளை நீங்கள் சரியாக செய்து விடுவீர்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது பொய் சொல்லி சமாளிக்க கூடாது. எதுவாக இருந்தாலும் உண்மையைப் பேசி பழகுங்கள். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு நன்மையை தரும். பொய் சொல்லி இன்று தப்பித்து எதிர்காலத்தில் பெருசாக விளைவுகளை சந்திப்பதை விட, உண்மையை சொல்லி இன்றே அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நன்மையை தரும்.

Recommended For You

About the Author: admin