ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.