நீங்கள் பேசுவது வீடியோவாக மாறும் அதிசயம்!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியானது நம்மை வேறொரு உலகத்துக்கே கொண்டு சென்று விடுகிறது.

அந்த வகையில் OpenAI நிறுவனமானது, அதன் அடுத்த அப்டேட்டான, SORA AIஐ வெளியிட்டுள்ளது.

இந்த SORA AIயானது, நாம் கொடுக்கும் வாக்கியங்களிலிருந்து துல்லியமாகவும் பிரம்மிக்க வைக்கும் அளவிலும் ஒரு நிமிட வீடியோவைக் கொடுக்கிறது.

இது மக்களின் சிக்கல்களை எளிதாக தீர்க்கக்கூடிய வகையிலான மாதிரிகளை உருவாக்கும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த SORA AIயினால், மிகவும் எளிதான அதேசமயம் எதார்த்தமான வீடியோக்களை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

Open AI Sora என்றால் என்ன?

Sora என்பது Open AIயால் உருவாக்கப்பட்ட ஒரு AI மாடல். இது நீங்கள் கொடுக்கும் கற்பனை உரைகளை அப்படியே ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கித் தரும். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே உருவாக்கிய வீடியோவில் சிலவற்றை சேர்க்கவும் நீக்கவும் முடியும். உயர்தரமான காட்சிகள், துல்லியத்தின் அடிப்படையில் வீடியோ அமையும்.

இது பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் செயல்கள், விரிவான பின்னணியுடன் கூடிய சிக்கலான காட்சிகளைக் கூட சோராவால் உருவாக்க முடியும்.

பயன்பாடு

தற்சமயம் இந்த Open AI Soraவை திரைப்பட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் என குறிப்பிட்ட குழுவுக்கே கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆய்வுகளுக்குப் பின்பே இது அனைவருக்கும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

Open AI Sora பாதுகாப்பானதா?

அந்த ஆய்வுகள்தான் தற்சமயம் நடந்து வருகிறது. இதில் பாலியல் சார்ந்த கண்டென்ட்கள் உருவாக்கம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற உரைகளைக் கொடுத்தால் வீடியோக்களை உருவாக்காது.

Recommended For You

About the Author: admin