தமிழக மீனவர்கள் கைது மோடி தலையிட வேண்டும்: ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும் , படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் படகுகளில் கருப்புக்கொடியை கட்டி 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் இந்திய முதல்வர் ஸ்டாலின் அறிக்கையொன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில்,

” தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும். மூன்று மீனவர்கள் நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கவலை அளிக்கிறது.

தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி செய்ய வேண்டும்.

மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. பெருமைமிக்க இந்தியர்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin