வாட்ஸ் அப் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதுப்புது அம்சங்களை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஃபேவரைட் கண்டாக்ட்களுக்கு பயனர்கள் மிகவும் சௌகரியமான முறையில் அழைப்பு எடுப்பதற்கான அம்சத்தை வாட்ஸ் அப் உருவாக்கி வருகிறது.
கால்ஸ் டேப்பின் மேல் புறத்தில் ஒரே ஒரு டாப் செய்வதன் மூலம் இந்த அம்சத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என WABetalinfo தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட்டானது, தங்களுக்கு மிகவும் விருப்பமான காண்டாக்ட்களுக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதற்கு அனுமதிப்பதன் மூலம் இந்த அம்சம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் காண்டாக்ட்களை பேவரைட் பட்டியலில் சேர்ப்பதனால் அவர்களது பெயரை காலிங் இன்டர்ஃபேசில் முதன்மையாக வைத்து அவர்களுக்கு உடனடியாக போன் செய்யலாம். இந்த அம்சமானது தற்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளது. வாட்ஸ் அப் இன் எதிர்கால அப்டேட்டில் இந்த புதிய அம்சம் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது.