இன்றைய ராசிபலன்கள் 10.02.2024

 

மேஷம்
வேலை செய்யும் இடங்களில் எதிர்பார்த்தபடி உங்களது செயல்திறன் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியிலான விஷயங்கள் சாதகமாக அமையும். பாரம்பரிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வணிகம் வேகம் பெறும். செல்வம் பெருகும். பொருளாதார நிலைமை முன்பை விட சீராக இருக்கும்.
பரிகாரம்: ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
ரிஷபம்
உங்களது தைரியம் மற்றும் செயல் திறன் சாதிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். வணிக துறையில் உள்ளவர்கள் பொருளாதார வாளர்ச்சிக்காக தனித்துவமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெறுவார்கள். முக்கிய விஷயங்களில் முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு வெண்ணிற மலர் மாலை அணிவிக்கவும்
மிதுனம்
இன்று நீங்கள் எளிமையை பேணுங்கள், பெரிதாக ஆரவாரம் செய்யாதீர்கள். வணிகப் பணிகளில் வேகம் காட்ட வேண்டும். உங்கள் திறமை மேம்படும். வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினால் வளர்ச்சி நிச்சயம்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்
கடகம்
தொழில், வியாபாரம் இன்று சுமுகமாக இருக்கும். வணிகர்களுக்கு இன்று தங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவும் சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கும். கடினமாக உழைத்தால் சிறப்பான வெற்றியைப் பெறலாம். பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
பரிகாரம்: அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றவும்.
சிம்மம்
புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் வேகம் இருக்கும். நீண்டகால திட்டங்கள் இன்று செயல்வடிவம் பெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வலுவாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த விஷயங்கள் இன்று நீங்கும். சொத்து தொடர்பான தகராறு இருந்தால், அதற்கு இன்று தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்
கன்னி
பொருளாதார விஷயங்களில் இன்று சமயோஜிதத்தை கடைப்பிடிப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் தொடரும். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வரும். புதிதாக கிடைக்கும் தொடர்பு சிறப்பான மாற்றமாக இருக்கும். உள்ளுக்குள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும்
துலாம்
பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் முன்னேறுவீர்கள். எதிலும் பேராசை வேண்டாம். நிதி விஷயங்களில் எச்சரிக்கை அதிகரிக்கும். தொழிலில் உள்ளவர்கள் வியாபாரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. அபாயகரமான வேலையை தவிர்த்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: சிவப்பு பசுவிற்கு வெல்லம் கொடுங்கள்
விருச்சிகம்
ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து முடிப்பதில் இன்று உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் பிறருக்கு முன்னோடியாக இருப்பீர்கள். தொழில் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். புதிய விஷயங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: பறவைகளுக்கு உணவளிக்கவும்
தனுசு
நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை இன்று முன்னெடுத்துச் செல்வீர்கள். நேர மேலாண்மைக்கு இன்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செலவுகளில் கட்டுப்பாடு இருக்காவிட்டால் கடன் வாங்க நேரிடும். வியாபாரத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். அதிக உற்சாகம் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: ஏழைக்கு வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள்.
மகரம்
நீங்கள் விரும்பிய இலக்கை அடைவதில் வெற்றி கிடைக்கும். சூழ்நிலைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும், செல்வம் பெருகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் இன்று ஏற்படும் முன்னேற்றம் உங்கள் போட்டியாளர்களை பிரமிக்க வைக்கும்.
பரிகாரம்: அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்
கும்பம்
அலுவலகத்தில் உங்களுக்கு தேவையான வேலையை முடிக்க பணிவு மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்துவார்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவு வைக்கவும்
மீனம்
அலுவலகத்தில் உங்களது இலக்கை வேகமாக முடிப்பீர்கள். தைரியத்தையும், துணிச்சலையும் வெளிபடுத்தும் சூழல் ஏற்படும். முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெற்றி உணர்வுடன் செயல்பட்டால் நினைத்த காரியம் கைகூடும். எல்லா வகையிலும் இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாகக் காத்திருந்த சில வேலைகள் முடிவடையும், இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்: துர்க்கை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்

Recommended For You

About the Author: admin