ரஷ்யா தனது நலனில் அக்கறை கொண்டு செயற்படும் எனவும் உக்ரைன் மீதான போரை ஏனைய நாடுகளுக்கு பரவ செய்யும் நோக்கம் இல்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதனால்,போலந்து, லத்வியா போன்ற நாடுகளை தாக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை எனவும் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன்-ரஷ்ய போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடான போலந்து மீது ரஷ்யா படையெடுக்குமாறு எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள புடின், போலந்து ரஷ்யாவை தாக்கினால் மாத்திரமே அப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
போலந்து, லத்வியா போன்ற நாடுகள் தொடர்பில் ரஷ்யாவுக்கு அக்கறையில்லை. இதனால் அந்நாடுகளை தாக்கும் எண்ணம் எமக்கில்லை. எதற்காக அந்த நாடுகளை தாக்க போகிறோம் என புடின் பதிலளித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனிய பிரதேசங்களை ரஷ்யாவுக்கு வழங்க வழிவகுக்கும் உடன்படிக்கையை செய்து தருமாறும் புடின் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய மேற்கொண்ட படையெடுப்புக்கு பின்னர் முதல் முறையாக அவர் அமெரிக்காவிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.