திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார் ராஜா ராணி சீரியல் நடிகர் பாலாஜி

ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் சீரியல் ராஜா ராணி. இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பான தியா அவுர் பாதி ஹம் தொடரின் ரீமேக் என்பது அனைவருக்குமே தெரியும்.

இந்த தொடரில் இதுவரை 2 கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. முதலில் நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் குழந்தை பிறக்க இருந்த நேரத்தில் தொடரில் இருந்து விலகினார்.

இப்போது வில்லியாக நடித்து வந்த அர்ச்சனா திடீரென தொடரில் இருந்து விலக இப்போது வேறொருவர் நடித்து வருகிறார்.

பாலாஜி திருமணம்
இந்த ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனாவின் கணவராக நடித்து வந்தவர் பாலாஜி. இவருக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,

Recommended For You

About the Author: webeditor