எந்த அணியிலும் ரோகித் சர்மா விளையாட முடியாது.. செக் வைத்த மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமரியாதை செய்யும் விதமாக கேப்டன் பதவியை பறித்தது.

மேலும் குஜராத் அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கி அவருக்கு அந்த பதவியை கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை ஏன் தூக்கினோம் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என்பதால் அவருக்கு அழுத்தத்தை குறைக்கவே இந்த முடிவை எடுத்ததாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரோகித் சர்மா மனைவி ரித்விக்கா, இதில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ரோகித் சர்மா வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. எனினும், ரோகித் சர்மா நினைத்தாலும் அவரால் மும்பை அணியை விட்டு வெளியேற முடியாத வகையில்,  ஐபிஎல் விதியை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு செக் வைத்து இருக்கிறது.

 

ஐபிஎல் விதிப்படி ஒரு வீரர் ஒப்பந்தமான பிறகு அந்த அணியை விட்டு வேறு அணிக்கு செல்ல முடியாது என்பதுடன்,  அவ்வாறு முயற்சி எடுத்தால் கூட அந்த வீரர் அந்த ஐபிஎல் தொடரிலே விளையாட முடியாத நிலை ஏற்படும்.

2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு செல்வதற்கு ஜடேஜா முயற்சிகள் எடுத்தார். இதனை எடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அடுத்து அந்த ஐபிஎல் சீசனில் விளையாட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல நடவடிக்கை எடுத்தாலும் அவருக்கு தடை விதிக்கப்படும் என்பதால், மும்பை அணிக்கு விளையாடியே ஆக வேண்டிய நிலையில் ரோஹித் இருக்கிறார்.

வேண்டுமானால் ரோஹித் சர்மா தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி நடப்பு தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 16 கோடி ரூபாய் ஆண்டுக்கு கொடுத்து வருகிறது.

இதனால் நடப்பாண்டில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக விளையாடியே ஆக வேண்டிய நிலை உள்ளதாக பார்க்கப்படுகின்றது

Recommended For You

About the Author: admin