யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்!

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த உலகக்கிண்ணம், வடபகுதி ரசிகர்களின் பார்வைக்காக யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துச் செல்லப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 21-ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனவரி 21 முதல் 24-ஆம் திகதி வரை இலங்கையின் முக்கிய நகரங்களான கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது.

பெப்ரவரி 07, 2026 அன்று கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன.

• கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் (8 போட்டிகள்)

• கொழும்பு SSC மைதானம் (5 போட்டிகள்)

• கண்டி பல்லேகலை மைதானம் (7 போட்டிகள்)

பாகிஸ்தான் அணி பங்கேற்கும் அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவு உள்ளதோடு, அவ்வணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியும் கொழும்பிலேயே நடைபெறும் என்பது விசேட அம்சமாகும்.

யாழ். மண்ணுக்கு செல்லும் உலகக்கிண்ணத்தை நேரில் கண்டு மகிழவும், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்!

Recommended For You

About the Author: admin