சங்கிலி அறுப்பில் தான் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் ஒரு முறைப்பாட்டை காண்பித்தால் வணக்கம் கூறி பாராளுமன்றத்தில் இருந்து விலகி வீட்டுக்கு செல்வேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறு வயதில் அனைவருக்கும் வீட்டில் அழைப்பதற்காக பெயர் ஒன்றை வைப்பார்கள். என்னை வீட்டில் தங்கம்(ரத்தரன்) என்று அன்பாக அழைப்பார்கள்.
எனினும் நான் சங்கலி பறிப்பில் ஈடுபட்டதற்காக இந்த பெயர் வந்ததாக அரசியலுக்கு வந்த பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் சமூகமயப்படுத்தி வருகின்றனர்.
நான் சங்கலி அறுப்பில் ஈடுபட்டதை நேரில் பார்த்தவர் எவராவது இருந்தால் வருமாறு சவால் விடுக்கின்றேன்.
பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர் பிரேலாலை செக்கா மல்லி என்று அழைப்பார்கள்.
அதேபோல் என்னை சிறுவயதில் தங்கம் என்று அழைப்பார்கள் என ரோஹித்த அபேகுணவர்தன மேலும் கூறியுள்ளார்.