தகர்க்கப்பட்ட கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை: விக்டோரியா மகாராணியின் சிலைக்கும் சிவப்பு சாயம்

அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றாண்டுகள் பழமையான கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை அகற்றப்பட்டது.

அதேநேரம், மெல்போர்ன் நகர மையத்திற்கு அருகில் விக்டோரியா மகாராணியின் சிலை ஒன்றுக்கு சிவப்பு நிறம் (பெயிண்ட்) பூசப்பட்டது.

வியாழன் (25) அதிகாலை 3.30 மணியளவில் Jacka Boulevard அருகே உள்ள கேப்டன் குக் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு மெல்போர்னில் நள்ளிரவில் நடந்த இந்த நாசவேலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆய்வாளர் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் நினைவுச்சின்னம் விக்டோரியாவில் டிசம்பர் 1914 இல் திறக்கப்பட்டபோது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன், அவுஸ்திரேலிய சமுதாயத்தில் இதுபோன்ற நாசகார செயல்களுக்கு இடமில்லை.

செயின்ட் கில்டாவில் ஒரே இரவில் சேதப்படுத்தப்பட்ட சிலையை சரிசெய்து மீண்டும் நிறுவ நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி அவுஸ்திரேலிய தினமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான அவுஸ்திரேலியர்களுக்கு இது உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் கடற்கரைக்குச் செல்வதற்கும், கோடைகால டெஸ்ட் போட்டியை அனுபவித்து மகிழும் வாய்ப்பாகவும் உள்ளது.

எனினும் திகதி தேர்வு 1788 இல் சிட்னி துறைமுகத்திற்கு ஐரோப்பிய குடியேறியவர்களின் வருகையுடன் ஒத்துப்போகிறது.

சிலருக்கு, இந்த திகதி ஒரு வன்முறை காலனித்துவ பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பழங்குடியினரை அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து கிட்டத்தட்ட அழித்துவிட்டதாக கருதி எதிர்ப்பினை வெளியிட்டும் வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin