நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்யும் நபருக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை காரணமாக நாடு அழிந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக ரணில் விக்ரமசிங்க கூறினால், தான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை மாற்றிய பின்னர், மேலும் இரண்டு வருடங்கள் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்தாலும் பிரச்சினையில்லை எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.