15 மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் 15 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பண கவுண்டர்களில் (cash counters) பணியாற்றியவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

மின்சார சபை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய தற்போது இந்த பணி இடைநீக்கம் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin