தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள M.G.R சதுக்கத்திலும் 107 ஆவது பிறந்த தின நிகழ்வு கொண்டாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.