பொலிஸ் அதிகாரிகள் சிலர் சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (18) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்கு முன்னதான செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்திருந்தால் இதனை தடுத்திருக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சில பொலிஸார் சிலர் சரியாகச் செயற்பட்டிருந்தால் சஹாரன் உள்ளிட்டோரை தாக்குதலுக்கு முன்னதாகவே கைது செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பெரும் தவறை இழைத்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.