கனடாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்கமானது 3.4 வீதமாக காணப்பட்டது.
இதேவேளை, நவம்பர் மாதம் பணவீக்கமானது 3.1 வீதமாக காணப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் எரிபொருள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பணவீக்கத்தில் சாதக மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2022ம் ஆண்டில் வருடாந்த பணவீக்க வீதம் 6.8 வீதமாக காணப்பட்டது.
2023ம் ஆண்டில் பணவீக்க வீதம் 3.9 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.