அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் -30° செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.
இதன் காரணமாக, 85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், போர்ட்லாண்ட் அதிகாரிகள், உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.