உளவுப் பார்த்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த மாதம் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை குறைப்பதற்கு கத்தார் நீதிமன்றம் முடிவு செய்துள்து.
மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரஜைகள் கடந்த மார்ச் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்துடன், கத்தார் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம், அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன, விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம். நீதிமன்ற அமர்வில் கத்தாருக்கான இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளோம், மேலும் அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குவோம். தொடர்ந்தும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.
குறித்த எட்டுப் பேரையும் மீள நாட்டிற்க அழைத்து வர இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்த அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வருவதில் இந்தியா தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.