இந்தியாவின் மணிப்பூரில்இருந்து சென்னை வழியாக இலங்கையின் தலைமன்னாருக்கு கடத்தி வரப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 67 கிலோ கிராம் ஐஸ் (methamphetamine)போதைப் பொருளுடன் இரண்டு பேரை தமிழநாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர்கள் என கூறப்படுகிறது.
இந்த போதைப் பொருளை மியன்மாரில் இருந்து மணிப்பூருக்கு எல்லை வழியாக கடத்தி வந்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
மணிப்பூரில் இருந்து சென்னை வழியாக இலங்கையின் தலைமன்னாருக்கு போதைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து படகு மூலம் கடத்தப்படவிருந்த போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இந்தய மத்திய அரசின் சுங்க திணைக்களத்தின் கீழ் உள்ள டி.ஆர்.ஐ. நிறுவனத்தின் அதிகாரிகள் போதைப் பொருளை பரிசோதிப்பதற்காக தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தமிழநாடு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.