உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த பிரியங்கா காந்தி, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அவருக்கு எந்த மாநிலமும் ஒதுக்கப்படவில்லை எனவும், இது எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அவரது பங்கு பற்றிய ஊகங்களைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.