கொழும்பு புறக்கோட்டை ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, 825 கிலோ காலாவதியான பால் மா விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில்,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால் மாக்களை எடுத்துச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்டி நுகர்வோரை ஏமாற்றி மொத்த விற்பனையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்ய துரித நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசேட புலனாய்வுப் பிரிவின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்லவின் பணிப்புரையின் பேரில், விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்கவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சோதனைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.