தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது
************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 27
( உருத்திரபசுபதி நாயனர் ) தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயப் பிரதான மண்டபத்தில் 13.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.
சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” ஸ்ரீருத்திரம் ஓதியதால் உருத்திரபசுபதி என்னும் திருப்பெயர் பெற்ற ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு அற்றினார். சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது