இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 1 கப்
சாக்லேட் சிரப் – 1/4 கப்
நெய் – 4 ஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
திராட்சை – தேவையான அளவு
பாதாம் – தேவையான அளவு
செர்ரி பழம் – தேவையான அளவு
வெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும். அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.