ஏலக்காய் பிரபலமான மசாலா என்றாலும் ஆயுர்வேதத்தில் இதன் நன்மைகள் அளப்பரியது.
ஏலக்காய் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.
இது பச்சை மற்றும் கருப்பு என இரண்டு வகைகளில் உள்ளன. கருப்பு ஏலக்காய் சளி மற்றும் இருமல் மற்றும் சில சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
ஏலக்காயை வரட்டு இருமலை விரட்ட எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
இருமலை விரட்டும் ஏலக்காய்
இருமல் அதிகம் இருக்கும் போது ஏலக்காய் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3-4 முறை எடுக்கலாம்.
அல்லது ஏலக்காய் விதைகளை மென்று சாப்பிடுவதும் இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
அல்லது ஏலக்காய் விதைகளை பொறுமையாக மென்று சாப்பிடலாம்.
நாள் ஒன்றுக்கு 4 ஏலக்காய்க்கு மேல் எடுக்க கூடாது.
அடிக்கடி ஏலக்காய் டீ குடித்தாலும் அதன் பலன்களை பெறலாம்.
ஏலக்காய் டீ
2-3 ஏலக்காய்களை பாலில் போட்டு டீத்தூள் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பிறகு அதை வடிகட்டி அதில் சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள்.
இந்த டீயை குடித்து வந்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது.
இதில் இஞ்சி மற்றும் துளசி இலைகளைக் கூட சுவைக்காக சேர்த்து கொள்ளுங்கள்