ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் அடிக்கடி புது புது விதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அப்படி ஹேக்கர்களை முழுமையாக இயக்க வழி செய்யும் பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட், மேக் போன்ற சாதனங்களில் தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆப்பிள் நிறுவனம் இரண்டு செக்யுரிட்டி அப்டேட்களை வெளியிட்டு உள்ளது. இதில், ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், இந்த பாதுகாப்பு பிழையானது ஹேக்கர்களுக்கு சாதனத்தை முழுமையாக இயக்க செய்வதற்கான வசதியினை வழங்கி விடும்.
மேலும், இதன் மூலம் அவர்கள் பயனர்கள் சாதனங்களில் எந்த மென்பொருளையும் இயக்க முடியும், என சோஷியல் ப்ரூஃப் செக்யுரிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரக்கேல் டோபாக் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஐபோன் 6எஸ் மற்றும் அதன் பின் வெளியான மாடல்களை பயன்படுத்துவோர் தங்களின் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என செக்யுரிட்டி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஐபேட் ஜென் 5 மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள், அனைத்து ஐபேட் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபேட் ஏர் 2, மேக் ஒஎஸ் மாண்டெரி கொண்டு இயங்கும் அனைத்து மேக் கம்ப்யூட்டர்களும் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளன.