பாடசாலைகளில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு
………………………………
தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும்.
இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் வளி மாசடைவதால் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றை மனங்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையால் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதப் 7 ஆம் திகதி முதல் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கமைவாக கல்வி அமைச்சு இம்மாதம் இடம்பெறும் சர்வதேச தினங்களான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் ( செப்டெம்பர்-7), உலக ஓசோன் தினம் (செப்டெம்பர்-16)
ஆகியவற்றை பாடசாலைகளில் கொண்டாடி மாணவர் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைவாக வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இத்தினங்களைக் கொண்டாடுவதற்கான வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி யா/பிரான்பற்று கலைமள் வித்தியாலயத்தில் புவியியல் பாட ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன்
தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் தொடர்பான விழிப்புணரவை மாணவர் மத்தியில் ஏற்படுத்தினார்.
இதேபோல் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியிலும் பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்களால் இன்றையதினம் ( செப்டெம்பர் 7) இத்தினத்தை பற்றியும், தூய வளியை பெறல் தொடர்பாகவும் சகல மாணவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.