வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றூ பிரான்ச் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
அந்த வகையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கேள்வி :- வடக்கு மாகாண ஆளுநர், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் பதவியிறக்கம் வகையில் செயற்பட்டு வருகிறார். இது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் :- வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே, வெகுவிரைவில் வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்படுவார் என்பது எனது கருத்து – என்றார் விக்னேஸ்வரன்.