பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.