இலங்கையின் இவ்வாண்டு ஜூலை மாதத்துக்கான தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி அதிகரிப்பை காட்டுவதாக ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு (2022) ஜூலையில் 19.92 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்ட தேயிலை உற்பத்தி 2023 ஜூலையில் 21.37 மில்லியன் கிலோ கிராமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாத்தில் 26.38 மில்லியன் கிலோ கிராமாக தேயிலை உற்பத்தி பதிவாகியிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.01 மில்லியன் கிலோ கிராம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.