ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி!

மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவிப்பு
1979 ஆம் ஆண்டின் இலக்கம் 61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆவது பிரிவின்படி அ ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 17, 2023 முதல் அமுல்படுத்தப்பட்டது.

அதன்படி, மின்சாரம்,பெற்றோலியம் மற்றம் எரிபொருள் விநியோகம், அஞ்சல் சேவைகள், வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலகைள், மருந்தகங்கள் அதுபோன்ற ஏனைய நிறுவனங்கள் போன்றவற்றில் இடம்பெறும் அனைத்து சேவை வேலை அல்லது உழைப்பு பராமரிப்பு வரவேற்பு கவனிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor