சரிவடைந்த தங்கம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சென்னையில் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5500 தாண்டிய நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய தங்க விலைநிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் 5,456 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.312 குறைந்து ஒரு சவரன் ரூ.43,648 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து கிராம் 4,469 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,752 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor