மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பகல்ல, நாகொல்ல பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் இருவர் புதையல் தோண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவ் இருவரும் புதன்கிழமை (09) தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர்
இவர்கள் மொனராகலை பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 54 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த தம்பகல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.