இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல முட்டைகளையும் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அம் முட்டைகளை வெதுப்பக மற்றும் கைத்தொழில் உற்பத்திகளுக்காக வழங்க முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அடுத்த வாரம் முதல் சகல பல்பொருள் அங்காடிகளிலும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.