சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலை ஆக்கிரமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி நாளை (05.08.2023) சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்குச் சங்கானை பேருந்து நிலையம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்!
அனைவரும் வருக! ஆதரவு தருக!
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று உரத்துச் சொல்வோம்! என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.