கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்

கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

முடிந்த வரையில் இருப்பதைக் கொண்டு கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்வதே சிறந்தது.

கடன் அடைய வெற்றிலை தீபம்

தீபம் ஏற்றுவதற்கு மூன்று நல்ல வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்று வெற்றிலையும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து அதன் மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பொழுது கடன் விரைவில் அடைய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கடன் விரைவில் அடைய மருதாணி இலை தீபம்

அதே போல் மருதாணி இலை தீபத்தையும் ஏற்றலாம். அதற்கு ஒரு பித்தளை தட்டில் முழுவதுமாக மருதாணி இலையை பரப்பிக் கொள்ளுங்கள்.

அதன் மேல் கொஞ்சம் சில்லறை காசுகளை போட்ட பிறகு சில்லறை காசுகளின் மீது இரண்டு அகல் விளக்கை வைத்து விட வேண்டும்.

அதிலும் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரின் மனதார நினைத்து வணங்குங்கள்.

இந்த இரண்டு தீப வழிபாட்டு முறையில் எந்த தீப வழிபாட்டு முறையை செய்தாலும் கடன் அடைவதற்கான வாய்ப்பு வருவதோடு பண வரவிற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

பணம் கையில் புழங்க ஆரம்பித்தாலே கடன் ஆனது அடைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றும் போது உங்களுக்கு பணவரவிற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

Recommended For You

About the Author: webeditor