பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் எழுந்த நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் அவரது ஆவி அப் பாடசாலையில் உலவுவதாக வதந்தி பரவி வருகிறது.
உயிரிழந்த மாணவி
அண்மையில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் உயிரிழந்த மாணவியின் நிழல் காணப்படுவதாகவும் இப்பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவர்களின் வருகையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான நிலையில் யாராவது தலையிட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தி பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிப்பது பொருத்தமானது எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.