சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் ; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக நாளை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிவரை சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்பம்: 31.07.2023 திங்கட்கிழமை பி.ப 4.00 மணி
நிறைவு : 01.08.2023 செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணி
இடம்: தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில்
நன்றி
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி