சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை தொடர் 04
சுந்தரர் குருபூஜை விழா புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் தேவஸ்தான பிரதான மண்டபத்தில் 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீக விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சேக்கிழார் பெருமான் , சுந்தரர் குருபூஜையைத் தொடர்த்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனையடுத்து , ” தொண்டு நெறி பரப்பிய மூலவர் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்களின் சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அதனை அடுந்து ஆன்மீக விருத்தினர் உரையும் குருபூஜையை முன்னிட்டு மாணவர்களிடம் நடத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.