நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிர்ழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை
நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் நீராடிய இளைஞர்கள் மூவரும் காணாமல்போயினர்.
இவர்களுடன் நீராடச் சென்ற மற்றோர் இளைஞர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மேலும் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.