ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.